சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கு இந்த சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அருள்மிகு நான்மடிகை பெருமாள் கோவில் சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக விளங்கியது.

Chennai HC seeks reply from Hindu endowment to protect Vishnu temple

தமிழ்ப் புலவர்களால் முதல் சங்கம் பூம்புகார் அருகில் உள்ள இங்கே நடைபெற்றதாக நம்பப்படுகிறது. 108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தற்போது பராமரித்து வருகிறது.

சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கோசாலாவிற்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. பல்வேறு சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆலயம் உரிய பாதுகாப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுமார் 4,000 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களை பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக கடந்த 2009 ம் ஆண்டு அறிவித்தது.

கடைக்குப் போறீங்களா.. பஸ்ஸில் பயணமா.. மாஸ்க் கட்டாயம் போடுங்க.. ஹூ புது அறிவிப்பு கடைக்குப் போறீங்களா.. பஸ்ஸில் பயணமா.. மாஸ்க் கட்டாயம் போடுங்க.. ஹூ புது அறிவிப்பு

ஆனால் இந்த ஆலயத்திற்கு உரிய காவலர்கள் நியமிக்கப்படாததால் சிலைகள் திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதனால், தற்போது உள்ள காவலர்கள் மற்றும் சிதிலமடைந்த கதவுகளை மாற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட என்றும் மேலும் ஆலயத்தின் பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற காவல்துறையை சேர்ந்த நபர் அல்லது ராணுவத்தை சேர்ந்த நபரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1ம் தேதி ஒத்திவைத்தனர்.

English summary
Chennai Highcourt orders Hindu religious and charitable endowments the plea to protect Vishnu temple which was built by Cholas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X