சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள் தேர்வு எழுதுங்கள்.. தவறில்லை.. 144 மருத்துவ மாணவர்களை சந்தோசப்படுத்திய சென்னை ஹைகோர்ட்

குறைந்த வருகைப்பதிவு கொண்ட 144 மருத்துவ கல்லூரி மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    144 மருத்துவ மாணவர்களை சந்தோசப்படுத்திய சென்னை ஹைகோர்ட்- வீடியோ

    சென்னை: குறைந்த வருகைப்பதிவு கொண்ட 144 மருத்துவ கல்லூரி மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    கடந்த 2018 மார்ச் மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை மெடிக்கல் கல்லூரி மீது இந்திய மருத்துவ கவுன்சில் முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்தது. அன்னை மெடிக்கல் கல்லூரி போதுமான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்கவில்லை என்று கூறி, இதன் மீதான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    இதில் படித்துக் கொண்டு இருந்த 144 மாணவ, மாணவிகள் வெவ்வேறு அரசு மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும்.

    தகுதி இல்லை

    தகுதி இல்லை

    இந்த நிலையில்தான் மருத்துவ கவுன்சில் இவர்களை 2ம் ஆண்டு தேர்வு எழுத தகுதி இல்லை என்று கூறி இருக்கிறது. இந்த மாணவர்கள் இடையில் கல்லூரி மாற்றப்பட்ட காரணத்தால் புதிய கல்லூரியில் குறைவான வருகைப்பதிவையே கொண்டு இருந்துள்ளனர்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    தேர்வு எழுத 75% வருகைப்பதிவு தேவைப்படும் நிலையில் இவர்களின் 60-70% வருகைப்பதிவே இருந்துள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகம் இவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதையடுத்து இவர்களில் சிலர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று இவர்கள் வழக்கு தொடுத்தனர்.

    ஃபீஸ் கட்டணும்.. வறுமையால் சிரமப்படும் மருத்துவ மாணவி.. உங்களின் உதவி இவரை படிக்க வைக்கும்!

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    இந்த வழக்கில் தற்போது நீதிபதி என். கிருபாகரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, இந்த மாணவர்கள் எல்லோரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் இவர்கள் 3ம் ஆண்டு செல்வதற்கு முழு தகுதி கொண்டவர்கள். அதனால் இவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவர்கள் படித்த கல்லூரி தனது அனுமதியை இழந்ததால் இவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    ஆனால் இதற்கும், மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மாணவர்களின் தவறு கிடையாது. இந்த நிலையில் கூட மாணவர்களிடம் 60-70% வருகைப்பதிவு இருக்கிறது. அதனால் அவர்களை தேர்வு எழுத சரியாக அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பால் 144 மாணவர்களும் தங்களது மருத்துவ படிப்பை வழக்கமாக தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Chennai High Court allows 144 students to continue their medicine with less attendence percentage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X