சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்தை மறைத்தாக வருமான வரித் துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை பிப்ரவரி 12 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 Chennai High Court asks TN govt over buildings violation in East coast

தமிழக பொதுபணித்துறை, கடலோர ஒழங்குமுறை மண்டலம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், முட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 5 சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு வராத நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞரிடம், உயரலை எழும்பும் இடங்களில், விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை, வரைபட விபரம், கூகுள் வரைபடத்தில் கட்டிடம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மறுத்தினத்திற்கு தள்ளி வைத்தனர்.

கையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்கையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்

அதேபோல, அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் உள்ள நிலையில், நோட்டீஸ் அனுப்பியும் தற்போது வரை 400 கட்டிட உரிமையாளர்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி மற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
The Chennai High Court has ordered the Tamil Nadu government to file details of buildings that have been constructed in violation of rules and regulations in the East coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X