சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓய்வு பெறும் ஏ.பி.சாஹி.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி.. கொலிஜியம் பரிந்துரை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க, நீதிபதிகளின் கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ஏ.பி.சாஹி. கடந்த வருடம் அக்டோபர் மாதம், சாஹி தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர், 31-ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

Chennai high court chief justice is Sanjib Banerjee

இந்த நிலையில் புதிய தலைமை நீதிபதி நியமன பணிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய கொலிஜியம் குழு தீவிரமாக ஈடுபட்டது. நாட்டின்பல்வேறு முக்கிய நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்திற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த நிலையில்தான் சென்னை ஹைோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பெயரை பரிந்துரை செய்துள்ளது கொலிஜியம்.

Recommended Video

    #BREAKING சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!

    கொலிஜியத்தின், பரிந்துரை பொதுவாக மத்திய அரசால் ஏற்கப்படும். எனவே சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    2006ம் ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வருகிறார் சஞ்சீப் பானர்ஜி. கொல்கத்தாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பிறகு சட்டம் பயின்றவர்.

    கொல்கத்தா உயர் நீதிமன்றம், ஒடிசா உயர் நீதிமன்றம், டெல்லி ஹைகோர்ட் போன்றவற்றில் வெற்றிகரமான வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்கத்தா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது பதவி உயர்வு பெற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கம்பெனி விவகாரங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கறிஞராக செயல்பட்டவர் சஞ்சீப் பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

    கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின் 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார் சஞ்சீப் பானர்ஜி. கொல்கத்தா, டெல்லி, ஜார்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில் செய்த அவர், சிவில், நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார். அதே போல,சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள வினித் கோத்தாரியை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    English summary
    The Supreme Court Collegium Wednesday recommended Sanjib Banerjee as chief justice of the Madras High Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X