சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திடீர் ராஜினாமா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தஹில் ரமாணி அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இன்று திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Chennai High Court Chief Justice VK Tahilramani resigns

மூன்று நீதிபதிகள் மட்டுமே கொண்ட குட்டி உயர்நீதிமன்றம் மேகாலயா ஹைகோர்ட் ஆகும். சென்னை உயர்நீதிமன்றம் போன்ற ஒரு பெரிய நீதிமன்றத்தில் பணியாற்றிய பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை புரமோஷன் செய்வது வழக்கம். ஆனால் தஹில் ரமாணி மேகாலயாவிற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிகிறது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த வருடம் மாற்றம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

1.54 மணிக்கு நடந்த அந்த விஷயம்.. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி.. இதுதான் நடந்தது!1.54 மணிக்கு நடந்த அந்த விஷயம்.. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி.. இதுதான் நடந்தது!

இதுபற்றி பாமக நிறுவனர் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது:


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்றமும், அதைத் தொடர்ந்த அவரது பணிவிலகலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை ஆகும். நீதித்துறையின் நலனை கருத்தில் கொண்டு இந்த இரு முடிவுகளும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்!

English summary
Madras High Court Chief Justice VK Tahilramani has sent her resignation papers to President Ram Nath Kovind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X