சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார்களில் பம்பர் பொருத்த கூடாது..அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களின் "பம்பர்" பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நான்கு சக்கர வாகனங்களின் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த மத்திய அரசும் தடை விதித்தது.

மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நடுரோட்டில் உட்கார்ந்த 90ஸ் கிட்ஸ்.. அவர் அடம் பிடித்த விஷயத்தை கேட்டு மிரண்ட தர்மபுரி போலீஸ்நடுரோட்டில் உட்கார்ந்த 90ஸ் கிட்ஸ்.. அவர் அடம் பிடித்த விஷயத்தை கேட்டு மிரண்ட தர்மபுரி போலீஸ்

ஹைகோர்ட் அதிருப்தி

ஹைகோர்ட் அதிருப்தி

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

பம்பர் தயாரிப்பாளர்கள்

பம்பர் தயாரிப்பாளர்கள்


இதையடுத்து மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்றுவரை விசாரணைக்கு வந்தது.

அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லையே

அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லையே

அப்போது மனுதாரர் தரப்பில், பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்றும், வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் எந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 1980 முதல் வாகனங்கள் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே என்றும் தெரிவித்தார்.

உத்தரவை அமல்படுத்த வேண்டும்

உத்தரவை அமல்படுத்த வேண்டும்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் பாதுகாப்பு, மிக அவசியம் என்று கருத்து தெரிவித்தனர். பம்பர் பொறுத்திய வாகன ஓட்டுனர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள் என குறிப்பிட்டனர். பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, இது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின் உத்தரவை மாநில ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்,மாநில அரசு பம்பர் தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
Bumper Ban In Tamil Nadu: The Chennai High Court has ruled that the ban on fitting "bumpers" to four-wheelers, including cars, cannot be lifted. The union government has issued the restraining order in the public interest, which is a policy decision of the government, which has ruled that the court cannot interfere. The judges ruled that the state had accepted the federal order and that the state government should strictly enforce the bumper ban order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X