சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கணவனை கொலை செய்த மனைவி.. போன் மூலம் நடந்த விசாரணை.. ஜாமீன் கொடுத்த சென்னை ஹைகோர்ட்!

கணவரை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஏப்ரல் 27 ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கணவரை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஏப்ரல் 27 ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தணிகைவேலன் என்பவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி ரேகாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 ம் தேதி, தணிகைவேலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Chennai High Court gives bail to a lady who killed her husband

இதுசம்பந்தமாக விசாரித்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், தணிகைவேலனை மனைவி ரேகா தான் கொலை செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனியாக இருக்கும் தனது 19 வயது மகளையும், 14 வயது மகனையும் கவனிக்க வேண்டியுள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, ரேகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை, தொலைப்பேசி மூலம் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதாலும், இரு குழந்தைகளையும் கவனிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, ரேகாவுக்கு ஏப்ரல் 27 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

English summary
Chennai High Court gives bail to a lady who killed her husband today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X