சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம், புதுவையில் அனைத்து நீதிமன்றங்களும், வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்: ஹைகோர்ட் அதிரடி முடிவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

Chennai High Court has announced six working days a week for all the courts

இதனால், பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்குதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு

பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Chennai High Court has announced six working days a week for all the courts in Tamil Nadu and Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X