சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளிதழ்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு சார்பாக, முரசொலி உள்ளிட்ட பத்திரிகைகளின் மீது போடப்பட்ட அனைத்து அவதூறுகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Recommended Video

    'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update

    தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசியது குறித்து அவ்வப்போது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தமிழகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகியவற்றின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

    Chennai High court has dismissed defamation pleas against news papers

    அதன்படி, 2012ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசின் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் தொடர்ந்த வழக்குகள், மக்கள் பிரதிநிதிகள் வழக்கு என்பதால், தனியாக பிரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

    தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், அதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தி ஹிந்து தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன் ஆகியோரும், நக்கீரன் தரப்பில் கோபால், முரசொலி தரப்பில் செல்வம், தினகரன் தரப்பில் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், தினமலர் தரப்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

    2 நாட்களில் இறந்துவிடுவேன்.. துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர் பரிதாப வீடியோ.. ஓபிஎஸ் தலையிடுவாரா?2 நாட்களில் இறந்துவிடுவேன்.. துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர் பரிதாப வீடியோ.. ஓபிஎஸ் தலையிடுவாரா?

    இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது முரசொலி நாளிதழ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமேரசன், தலைவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் விதமாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடும்போது, அந்த கருத்துகளின் அடிப்படையில் தங்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாகவும், இது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசும் கடைபிடித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் போடபட்டால் அவதூறு வழக்கு தொடரப்படுகிறது என்றும் வாதிட்டார்.

    நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தனி நபர் மீது விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டாலும் அரசின் செலவில் தான் இந்த அவதூறு வழக்குகள் பதியபடுகிறது என்பதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்து குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாக குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அனைத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

    இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், முரசொலி நாளிதழ் உள்ளிட்ட நாளிதழ்களில் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்

    English summary
    Chennai High court has dismissed defamation plea filed against news papers by Tamilnadu government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X