சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி உறுதி மொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி உறுதி மொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் கோவில் நிர்வாக பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோவிலில் உள்ள முதன்மை தெய்வத்தின் முன், தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும் அது தொடர்பான உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Chennai High Court notices TN govt in the case against Hindu Endowments Board

இந்த சட்டப்பிரிவுகளின் படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த உண்மை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக கூறி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வு, மனுவுக்கு நவம்பர் 28 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

English summary
Chennai High Court notices Tamilnadu govt in the case against Hindu Endowments Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X