சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யூடியூப்பில் ஒளிபரப்பான சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை.. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Chennai High Court trial broadcasted on a YouTube channel

இந்த வழக்கை நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தலை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டு விசாரணையை கண்டதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விசாரணையில் இடையூறு ஏற்பட்டது. இதனால் எரிச்சலடைந்த நீதிபதிகள் வழக்கை விசாரிக்க மறுத்து விட்டனர். விசாரணை லிங்கில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. மாணவர்களில் சிலர், இன்றைய வழக்கு விசாரணையை யூ- டியூப் சேனலில் இணைப்பை ஏற்படுத்தி, ஒளிபரப்பு செய்துள்ளனர். நீதிமன்ற விசாரணை சமூக வலைதளத்தில் நேரடி காட்சியாக ஒளிபரப்பானது, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்குக்கு தொடர்பில்லாதவர்களை உள்ளே அனுமதிக்காத நிலையில், யூடியூபில் ஒளிப்பரப்பாகிறது.

இது நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் காணொலி மூலம் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், செய்தியாளர்கள் மட்டும் பார்வையிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The broadcast of the Chennai High Court trial on a YouTube channel has caused controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X