சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை.. அதிரடி முடிவு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை செய்யப்படும் என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை செய்யப்படும் என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

Recommended Video

    விமானிக்கு கொரோனா... அவசரமாக திரும்பி Air India விமானம்

    கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மிலம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Chennai High Court will continue with video hearing till lockdown

    நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.

    இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்

    மதுரைக் கிளையை பொறுத்தவரை, வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிப்பதுடன், அரசுத்தரப்பு வழக்கறிஞருடன் சேர்த்து ஐந்து வழக்கறிஞர்களை மட்டும் அனுமதித்து நீதிமன்ற அறையிலும் வழக்குகளை விசாரிக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ்

    நீதிமன்ற அறைகளில் 10 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருந்தால், வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai High Court will continue with video hearing till lockdown ends.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X