சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத வேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

ரேஷன் கடை பொருட்களை திருடியதாக சித்ரா என்பவர் மீது வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவர் புகார் அளித்தார்.. இதனால் சித்ரா வழக்கறிஞர்கள் ஸ்டான்லி ஜான்,புகழேந்தி உள்ளிட்ட சிலருடன் ராமதாஸ் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர்.

chennai highcourt issued warrant to Vellore Sathuvachari inspector

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது..

இந்நிலையில் ஏழு மாதங்கள் ஆகியும் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என கூறி வேலூர் சத்துவாச்சேரி ஆய்வாளருக்கு எதிராக ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்!

வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். ஏற்கனவே இரண்டு முறை உத்தரவிட்டும் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிணையில் வெளி வரகூடிய பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்..

மேலும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் ஆய்வாளரை நேரில் ஆஜர்படுத்த வேலூர் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார்.

English summary
chennai highcourt issued warrant to Vellore Sathuvachari inspector over Contempt of court case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X