இது சும்மா டிரெய்லர்தான்... மெயின் பிக்சர பாப்பீங்க.. எல்லாம் அதுக்கான அறிகுறிதான்!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இது வடகிழக்கு பருவமழைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓய்ந்தது. அடுத்தது வடகிழக்கு பருவமழைதான். இதனால் தமிழக மக்கள் குஷியாகினர்.

கடந்த 21-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் மழை தள்ளி போவதாகவும் அது 26-ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
எனினும் 26-ஆம் தேதியிலிருந்தும் தாமதமானது. நேற்றைய நிலவரப்படி நவம்பர் 1-ஆம் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நேற்று முதலே சென்னையில் ஜில்லென காற்று வீசியது. இந்நிலையில் இன்று காலை மேகமூட்டமாக இருந்த நிலையில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. ஈக்காட்டுதாங்கல் , கோடம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கிண்டி, சூளைமேடு, தரமணி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, தாம்பரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
இந்தோனேஷியா விமான விபத்து.. இந்திய விமானி உள்பட 189 பேரும் பலி
அதுபோல் திருவள்ளூர், புழல், ரெட்டேரி, செங்குன்றம், மாதவரம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கும் நிலையில் இந்த லேசான மழை இதம் அளிக்கிறது.