சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் 50 சதவிகித இருக்கைகளில் அமர்ந்து உணவருந்தலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டது. ஆனால், இந்த வசதியை வரும் திங்கட்கிழமை முதல் பின்பற்ற முடிவு செய்திருப்பதாக சென்னை ஹோட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழகம் உட்பட நாடு முழுக்க தளர்வுகளுடன் கூடிய 7வது கட்ட ஊரடங்கு அதாவது அன்லாக் 3.0, இன்று அதிகாலை 12 மணிக்கு மேல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவையடுத்து, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று காலையே கூட்டமோ கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று காலையே கூட்டமோ கூட்டம்

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

தியேட்டர்கள் ஷாப்பிங் மால்கள் ஆகியவையும் திறக்கப்படாது. மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உணவகங்களில் 50 சதவீதம் இருக்கை வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம் என்ற சலுகையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தளர்வுகள்

தளர்வுகள்

புதிய தளர்வுகள் இன்றைய தினம் முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான ஓட்டல்கள் 50 சதவீதம் பேர் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்ற தளர்வை கடைபிடிக்கவில்லை.

ஹோட்டல் ஊழியர்கள்

ஹோட்டல் ஊழியர்கள்

அதற்கு முக்கிய காரணம், பெரும்பாலான பணியாளர்கள் வெளியூர்களுக்குச் சென்று விட்டதுதான். அவர்களுக்கு இ பாஸ் பெற்றுக் கொடுத்து உடனடியாக சென்னைக்கு திரும்பும் ஏற்பாட்டை செய்ய முடியாது என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், 50 சதவீதம் பேர் அமரக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை செய்ய முன்வந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Unlock 3.0 | Night Curfew removed
    பார்சல் சேவை

    பார்சல் சேவை

    எனவே திங்கள்கிழமை முதல் அரசு அறிவித்துள்ள சலுகைகளை பின்பற்ற உள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள், பார்சல் கொடுத்து திருப்பியனுப்பப்பட்டனர்.

    English summary
    Chennai hotel: The day before yesterday, the Tamil Nadu government announced that customers can dine in 50 percent of the seats in hotels. However, the Chennai Hotel Association has decided to follow this facility from next Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X