சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை

மாணவி பாத்திமா தற்கொலை குறித்து கமிஷனர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடியில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

    சென்னை: தீவிரமாகி வருகிறது மாணவி பாத்திமாவின் தற்கொலை விசாரணை.. சென்னை ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் உதவி ஆணையர் பிரபாகரன் நேரில் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தற்போது சென்சிட்டிவாக மாறி விட்டதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பாத்திமா தற்கொலை வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை இனி நடைபெறும் என்றும் கமிஷனர் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். திடீரென கடந்த நவம்பர் 9-ம் தேதி ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார் பாத்திமா.

    தற்கொலை குறித்து விசாரணை நடத்தி சென்னை கோட்டூர்புரம் போலீஸார் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஆனால், தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்தார். ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும், நடவடிக்கை தேவை என்றும், கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

    முதல்வர் பினராயி விஜயன்

    முதல்வர் பினராயி விஜயன்

    அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, எடப்பாடியாரும், பாத்திமாவின் தற்கொலை விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    இணை ஆணையர்

    இணை ஆணையர்

    இதையடுத்து, பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 11 பேரிடம் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். இப்போது சென்னை ஐஐடியில் இணை ஆணையர் சுதாகர் நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். இதுவரை பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 22 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி உள்ளது.

    ஐஐடி கேம்பஸ்

    ஐஐடி கேம்பஸ்

    இனி இந்த விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சென்னை ஐஐடியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, ஐஐடி கேம்பஸ் முன்பு, இந்திய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் தரப்பு கோஷங்களை எழுப்பியது.

    சென்சிடிவ் வழக்கு

    சென்சிடிவ் வழக்கு

    நேரடி விசாரணையில் இறங்கி உள்ள கமிஷனர் விஸ்வநாதன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "மாணவி தற்கொலை குறித்த விசாரணை நடந்து வருகிறது. இன்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த வழக்கு தற்போது சென்சிட்டிவாக மாறி விட்டதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பாத்திமா தற்கொலை வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

     ஈஸ்வரமூர்த்தி

    ஈஸ்வரமூர்த்தி

    உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை இனி நடைபெறும். இந்த விசாரணைக் குழுவில் பல உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கூடுதல் துணை ஆணையர் மெகலீனா விசாரணை அதிகாரியாக இருப்பார். சிபிஐயில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி, பிரபாகரன் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

     புலன் விசாரணை

    புலன் விசாரணை

    இது சம்பந்தமான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.. விரைவில் புலன் விசாரணை முடித்து அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். இந்த விசாரணை முழுமையாக நடந்து முடியும் வரை தகவல்களை சொல்ல முடியாது. முழு விசாரணைக்குப் பின்னர் உண்மைகள் தெரிய வரும்" என்றார்.

    English summary
    Chennai IIT Student Death: chennai commissioner vishwanathan, and joint commissioner sudhakar direct inquiry in iit campus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X