சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்

மாணவி பாத்திமா தற்கொலையில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி மாணவி தற்கொலை... அதிர வைத்த செல்போன் ஆதாரம்

    சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் கேரள, தமிழக மக்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தையும் பெற்றிருக்கிறது.

    18 வயது கேரள மாணவி ஃபாத்திமா லத்திஃப், சென்னை ஐஐடியில் படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாஸ்டல் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எல்லா தேர்விலும், எல்லா பாடங்களிலும், பாத்திமா முதல் மார்க் எடுப்பாராம்.

    ஆனால், போன மாசம் இன்டர்னல் தேர்வு நடந்துள்ளது.. அதில், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் கம்மியான மார்க் வாங்கியதால் மன உளைச்சலில் தூக்கு போட்டுக் கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

    என் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தைஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை

    அழுதாள்

    அழுதாள்

    "பேராசிரியர் பத்மனாபன் என் மகளை அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். அவர் தன்னை அழ வைக்கிறார்.. அவரை பற்றி அடிக்கடி எங்களிடம் சொல்லி கொண்டே இருப்பாள்.. தினமும் ராத்திரி 9 மணி ஆனால், ஹாஸ்டலில் என் மகள் அழுதிருக்கிறாள்.. அதனால் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய வேண்டும்" என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

    பெற்றோர் மனு

    பெற்றோர் மனு

    அதேபோல, தமிழக காவல்துறையினர் விசாரிக்கும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பாத்திமாவின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். பெற்றோரின் இந்த பரபரப்பு தகவலால் கேரளா மட்டுமல்லாமல், தமிழகமும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

    ஜவாஹிருல்லா

    ஜவாஹிருல்லா

    மதரீதியான துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா மரணமடைந்துள்ளதாகவும், பேராசிரியர் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்றும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    விசாரணை

    விசாரணை

    இதனிடையே, மாணவியின் தற்கொலை தொடர்பாக பேராசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்படுகிறது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தையும் பெற்றிருக்கிறது.

    English summary
    iit student fatima's parents submitted a petition to kerala cm and tn police take action on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X