சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்

மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர் மல்க மகளை பற்றி சொல்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோம்.. மாணவி பாத்திமாவின் தாய் கண்ணீர்

    சென்னை: "முஸ்லிம் பெண்கள் அணியும் முக்காடுகூட என் மகளை அணியவிடவில்லை. முக்காடு அணிந்திருந்தால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு எதாவது தொல்லை வரும் என்று நாங்கள் பயந்து கிடந்தோம்.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதான் அனுப்பி வெச்சோம்" என்று ஐஐடி மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர் மல்க சொல்கிறார்!
    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். நல்ல அறிவுடைய பெண்.. படிப்பில் சுட்டியாக விளங்கியவர். பிளஸ்டூவில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றவர். சென்னை ஐஐடியில் படித்து வந்தார். அங்கும் அவர்தான் படிப்பில் நம்பர் ஒன். திடீரென டந்த நவம்பர் 9-ம் தேதி ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார் பாத்திமா.

    தற்கொலை குறித்து விசாரணை நடத்தி சென்னை கோட்டூர்புரம் போலீஸார் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறி விசாரணையை முடித்துள்ளனர். ஆனால், தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்அதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்

     சுதர்சனம்

    சுதர்சனம்

    தனது தற்கொலைக்கு யார் காரணம் என்று கூறி மகள் 2 குறிப்புகளை எழுதி வைத்திருந்ததாக சொன்னார். முதல் குறிப்பில், தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன்தான் காரணம் என்றும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் எழுதியுள்ளார் என்றும் சொல்லி நியாயம் கேட்டார் பெற்ற தந்தை.

     பயமா இருந்தது

    பயமா இருந்தது

    கேரள மாநிலமே அதிர்ந்தும், கொதித்தும் போயுள்ளது இந்த சம்பவத்தால். பாத்திமாவின் அம்மா ஊடங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றினை தந்தார். அதில் அவர் கண்ணீர் மல்க சொன்னதாவது: "இஸ்லாமியர் என்பதால் வெளியூருக்கு அனுப்பவே பயமாக இருந்தது. தேசமும் முழுவதும் இந்துத்துவா நிலவி வருகிறது.. மதவெறுப்பின் காரணமாக, முஸ்லிம் பெண்கள் அணியும் முக்காடுகூட என் மகளை அணியவிடவில்லை. முக்காடு அணிந்திருந்தால் முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு ஏதாவது தொல்லை வரும் என்று நாங்கள் பயந்து கிடந்தோம்.

    மேற்படிப்பு

    மேற்படிப்பு

    ஆனால், நாங்க என்ன செய்யட்டும், அவள் பெயர் பாத்திமா லத்தீப்-ன்னு ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளை போல சாதாரணமாகவே டிரஸ் போட்டுக்கோம்மா என்று சொன்னோம். ஏன்னா, நாட்டில் நிலவுகிற சூழல் அப்படி.. முதல்ல பனாரஸில் மேற்படிப்பு படிக்கதான் சீட் கிடைத்தது.. ஆனால், வடமாநிலங்களில் கும்பல் படுகொலைக்கு பயந்துபோய்தான் நாங்களே வேணாம்னு சொல்லிட்டோம்.

     முஸ்லிம் நண்பர்கள்

    முஸ்லிம் நண்பர்கள்

    சர்வசாதாரணமாக படுகொலை நடக்கிற தேசம் இது.. வேண்டாம் என்று நான்தான் பிடிவாதமாக சொன்னேன்.. அதுக்கப்புறம்தான் மெட்ராஸ் ஐஐடியில் படிக்க அனுப்பி வெச்சோம். தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சுதான் அனுப்பினோம். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி-யில் குறைவானவர்களே!

     தொல்லைகள்

    தொல்லைகள்

    ஐஐடி-யில் என் மகளுக்கு நிறைய தொல்லைகள் தந்திருக்கிறார்கள். இன்டெர்னல் மார்க் பற்றி பேராசிரியரிடத்தில் என் மகள் விவாதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை.. பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துட்டாள்.." என்றார் கண்ணீருடன்!

    English summary
    iit student fatima latifs mother says that, "we believe tamilnadu is safe for my daughter"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X