சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர்.. பெரும் சரிவை நோக்கி இந்தியாவின் டெட்ராய்ட்.. அதிர்ச்சி செய்தி!

ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவு காரணமாக சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் வரை வேலையை இழந்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Automobile industry in trouble | ஆட்டோமொபைல் துறை சரிவு! சென்னைக்கு எச்சரிக்கை

    சென்னை: ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவு காரணமாக சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் வரை வேலையை இழந்து உள்ளனர்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட சமயம் அது.. இந்தியாவில் எல்லா மாநிலங்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கோயம்புத்தூர்தான்.

    ஆம் கோவையில் மிகப்பெரிய டெக்ஸ்டைல் நிறுவனராக இருந்த நபர்கள் எல்லாம் தங்கள் நிறுவனத்தை மூடிவிட்டு, வேறு நிறுவனத்தில் தின சம்பளத்திற்கு சேரும் நிலை ஏற்பட்டது. இப்போது அதே நிலைமை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது.

    பாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையாபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா

    இந்தியாவின் டெட்ராய்ட்

    இந்தியாவின் டெட்ராய்ட்

    சென்னை, ''இந்தியாவின் டெட்ராய்ட்'' என்று அழைக்கப்படுகிறது. காரணம் சென்னையில் செயல்படும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அதிக அளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கிறது. அதேபோல் சென்னையிலும் இருப்பதால், சென்னைக்கு அந்த சிறப்பு கிடைத்தது.

    சென்னையின் அஸ்திவாரம்

    சென்னையின் அஸ்திவாரம்

    சென்னையின் அதீத பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரம் என்றால் அது ஆட்டோமொபைல் துறைதான் என்று கூறலாம். சென்னையில் ஐடி நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால் பெங்களூர் அளவிற்கு கிடையாது. இதனால்தான் என்னவோ ஐடி உலகில் பெரிய சரிவு ஏற்பட்ட போது கூட, சென்னைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆட்டோமொபைல் துறையின் மூலம் சென்னை நிலையாக சரிவை சந்திக்காமல் இருந்தது.

    ஆனால் இப்போது என்ன

    ஆனால் இப்போது என்ன

    ஆனால் சென்னையின் ஆணி வேரான, ஆட்டோமொபைல் துறைதான் தற்போது சரிவை சந்தித்துள்ளது. இதனால் வரிசையாக அம்பத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை பல பகுதிகளில் உள்ள சிறு சிறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. அதேபோல் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் தங்களது ஆலைகளை திறக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

    என்ன சொல்கிறது

    என்ன சொல்கிறது

    சிறு தொழில்களின் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் இதுவரை இந்த ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி காரணமாக 70 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர். அதேபோல் இன்னும் 35 ஆயிரம் பேர் வேலையை விட்டு 10 நாட்களுக்குள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    எந்த நிறுவனம்

    எந்த நிறுவனம்

    முக்கியமாக சென்னையில் உள்ள லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் கிளைட்டான் மற்றும் விப்கோ போன்ற முக்கிய நிறுவனங்கள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமா என்றால் சென்னையின் அடையாளமாக கருதப்படும் நிறுவனங்கள் இவ்வளவு பெரிய சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இதில் இருந்து சென்னை மீள இன்னும் பல வருடங்கள் ஆகும்.

    ஆனால் என்ன சொல்கிறார்

    ஆனால் என்ன சொல்கிறார்

    ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பொருளாதார சரிவை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. உலகம் முழுக்க பொருளாதார சரிவு இருக்கிறது என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். பொருளாதார சரிவை இப்போதே ஒப்புக்கொண்டு, பொருளாதார அறிஞர்களின் அறிவுரையை ஏற்று அரசு இப்போதே செயல்பட தொடங்க வேண்டும்.

    English summary
    Chennai: India's Detroit suffocating to breath due to Fall in the Automobile industry continues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X