சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் வெளுத்தெடுத்த கனமழை.. நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளக்காடாக மாறிய மகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    அப்பாடா ஒருவழியா வடகிழக்கு பருவமழை தீவிரமாகிருச்சு டோய் ! TamilNaduWeather update

    சென்னை: சென்னையில் முதல் முறையாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நள்ளிரவு முதல் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அதன் பிறகு வந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை.

    இதனால் ஆண்டுதோறும் தண்ணீர் பஞ்சம், வறட்சி, விவசாயம் செழிப்பின்மை ஆகியவற்றால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இப்படி எல்லா பக்கமும் அணைகட்டுனா எப்படி ஆபிஸ் போறது.. சென்னையில் மக்கள் அவதி இப்படி எல்லா பக்கமும் அணைகட்டுனா எப்படி ஆபிஸ் போறது.. சென்னையில் மக்கள் அவதி

    அக்டோபர் மாதம்

    அக்டோபர் மாதம்

    இந்த நிலையில் இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் என்றும் வரும் கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கவும் மக்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

    வங்கக் கடல்

    வங்கக் கடல்

    ஆரம்பத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. அரபிக் கடலில் இரு புயல்கள் உருவாகின. எனினும் அவை தமிழகத்துக்கு பலனை அளிக்கவில்லை. அது போல் வங்கக் கடலில் உருவான புயலும் மேற்கு வங்கம் நோக்கி திரும்பிவிட்டது.

    கொட்டித் தீர்த்த மழை

    கொட்டித் தீர்த்த மழை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கியிருந்தது.

    வாகன ஓட்டிகள்

    வாகன ஓட்டிகள்

    தாம்பரம்- பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிகப்பட்டது. வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இன்னும் ஒரு வாரத்துக்கு மழை என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    Heavy rain lashes in Chennai and suburbs from midnight. Chennai is flooded after long time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X