சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் காட்டிலும் சென்னையில் மோசமான காற்று மாசு.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியை காட்டிலும் வடசென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

டெல்லியில் கடந்த 10 நாட்களாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் 8 இடங்களில் மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

இதனால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி வேறு வந்துவிட்டதால் பட்டாசுகள் மேலும் காற்றை மாசுப்படுத்தின.

விமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்விமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்

மழை பெய்தால்

மழை பெய்தால்

பின்னர் டெல்லியில் வாகன கட்டுப்பாடு முறை அமலுக்கு வந்தது. இதனால் காற்றின் மாசு ஓரளவுக்கு குறைந்தது. இதையடுத்து மழை பெய்தால்தான் காற்று மாசு குறையும் என்ற நிலையில் டெல்லி இருந்தது.

இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம்

டெல்லியில் உள்ள காற்று மாசு சென்னைக்கும் வரும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்திருந்தார். இதை சென்னை வானிலை மையமும் இந்திய வானிலை மையமும் மறுத்திருந்தது.

4 நாட்களுக்கு

4 நாட்களுக்கு

மேலும் சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே ஏராளமான மலைகள், நிலங்கள், நீர் நிலைகள் இருப்பதால் இவற்றையெல்லாம் தாண்டி காற்று மாசு தமிழகத்துக்கு வராது என்றும் கூறப்பட்டது. எனினும் சென்னையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

சென்னையில் காற்று மாசு

சென்னையில் காற்று மாசு

சென்னையில் காற்று மாசு குறித்து மருத்துவ அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் காற்று மாசு குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தனர். கடந்த பல ஆண்டுகளாகவே சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

தென் சென்னையிலும்

தென் சென்னையிலும்

இதை கவனத்தில் கொண்டு சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் காற்று மாசு அளவிடப்பட்டது. அப்போது வடசென்னையில்தான் காற்று மாசு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கூறுகையில் அது போல் தென் சென்னையிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

நச்சுப்புகை

நச்சுப்புகை

வடசென்னையில் காற்று மாசால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும். காற்றின் சுழற்சி காரணமாக வடசென்னையில் தொழில்நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதிலிருந்து வெளியாகும் நச்சுப் புகை அனைத்து இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

இதனால் போயஸ்கார்டன், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகமாகவே உள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவை சரி செய்ய வேண்டும். 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் இந்த காற்று மாசு பாதிப்பை கொடுக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
Chennai is getting worsen than Delhi because of polluted air. North Chennai and South Chennai gets polluted air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X