சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்?

சென்னையில் பெரிய அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெரிய அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் ஜூன் 1ம் தேதிக்கு பிறகு சென்னையில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Flight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்..

    கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் போடப்பட்டுள்ளது. லாக்டவுன் 3.0 வரை பெரிய அளவில் நாடு முழுக்க கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் லாக்டவுன் 4.0ல் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சென்னையிலும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. முக்கியமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் அமலில் உள்ளது.

    இது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்!இது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்!

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சென்னையில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று வரை சென்னையில் 9989 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இப்படி கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருவதுதான் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் இருக்க காரணம் ஆகும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறுகிறார்கள். சென்னையில் பெரிய அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் ஜூன் 1ம் தேதிக்கு பிறகு சென்னையில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறுகிறார்கள். இதற்கான எக்சிட் பிளான் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. தமிழக அரசு சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

     கட்டுப்பாட்டு பகுதி

    கட்டுப்பாட்டு பகுதி

    சென்னையில் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டுமே கொரோனா லாக்டவுன் இருக்கும். மற்ற இடங்களில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள். அதிலும் சென்னையில் குறைவான இடங்கள் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகள் என்று அறிவிக்கப்படும். ஏற்கனவே கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 500க்கும் கீழே குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் குறைக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

    திட்டங்கள்

    திட்டங்கள்

    அதேபோல் கட்டுப்பாட்டு பகுதிக்கான விதிகளையும் அரசு மாற்றி உள்ளது. அதன்படி ஒரு தெருவில் நிறைய வீடுகளில் கொரோனா இருந்தால் அந்த தெரு மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். மாறாக மொத்த ஏரியாவும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படாது. இதனால் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் பெரிய அளவில் குறையும். இதனால் தளர்வுகள் விரைவில் அமலுக்கு வரும் என்கிறார்கள்.

    முக்கிய தளர்வு திட்டம்

    முக்கிய தளர்வு திட்டம்

    சென்னையில் முக்கியமாக பொருளாதார ரீதியான தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. 25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்கலாம் என்று அரசு கூறியுள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொருளாதாரம் முக்கியம்

    பொருளாதாரம் முக்கியம்

    கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை. சென்னையில் பொருளாதார செயல்பாடுகளை மீட்டு கொண்டு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதில் முக்கிய தளர்வுகள் வரும் என்கிறார்கள். அதிக அளவில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்கும் வகையில் தளர்வுகள் வரும் என்று கூறுகிறார்கள். விரைவில் பணிகள் முழு வீச்சில் தொடங்கும்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்தியாவின் ஜிடிபிக்கு அதிக பங்கு அளிக்கும் இரண்டாவது பெரிய நகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் சென்னையில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா முழுக்க பாதிக்கும். ஆட்டோமொபைல் உற்பத்தி பாதிக்கும். இதை தடுக்கும் பொருட்டு, தற்போது சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்.

    ஆனால் சந்தேகம்

    ஆனால் சந்தேகம்

    ஆனால் சென்னையில் போக்குவரத்து சேவை, ஆட்டோ சேவை தொடங்குவது சந்தேகம்தான். மக்களை அதிகம் வெளியே விடுவதால் அரசுக்கு விருப்பம் இல்லை. விமான சேவை தொடங்குவதும், ரயில் சேவை தொடங்குவதும் சந்தேகம்தான்.அரசு பொருளாதார பணிகள் மீது மட்டுமே இப்போது கவனம் செலுத்தும் என்று கூறுகிறார்கள். இதனால் சென்னை விரைவில் பொருளாதார ரீதியாக மீள வாய்ப்புள்ளது.

    English summary
    Chennai is preparing for massive ease in Lockdown amid surge in cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X