சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை கே.கே. நகர் முதல் அமெரிக்கா வரை... சைவ உணவை வெளிநாட்டுக்கு கொண்டு சேர்த்த ராஜகோபால்

Google Oneindia Tamil News

Recommended Video

    Saravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ

    சென்னை: சாதாரண குக்கிராமத்தில் பிறந்த ராஜகோபால் அண்ணாச்சி சென்னை கே.கே. நகர் முதல் அமெரிக்கா வரை சரவண பவன் உணவகம் மூலம் சைவ உணவை வெளிநாட்டுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே புன்னை நகர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பி. ராஜகோபால். என்ற சரணவன பவன் ராஜேகோபால் சென்னை, கே. கே. நகர் பகுதியில் 1981 ஆம் ஆண்டில் டிசம்பர் 14 அன்று சரவண பவன் எனும் பெயரில் தொடங்கிய உணவகம்தான் அந்த நிறுவனத்தின் முதல் உணவகமாகும்.

    டேபிள் துடைத்தவர்

    டேபிள் துடைத்தவர்

    ராஜகோபால் ஆரம்ப காலங்களில் ஓட்டலில் டேபிள் துடைத்தவர். தனது கடின உழைப்பால் பின்னாளில் ஓட்டல் ஆரம்பித்தார். எல்லோரையும் போல் உணவுகளை வழங்கவில்லை. தன்னுடைய உணவு மற்ற உணவுகளை விட மிகத்தரமாக இருக்க வேண்டும் என்பதில் உறதியாக இருந்தார்.

    மண்ணாசை.. பெண்ணாசை.. ஜீவஜோதி மீது பேராசை.. அது மட்டும் இல்லேன்னா.. ராஜகோபால் லெவலே வேற! மண்ணாசை.. பெண்ணாசை.. ஜீவஜோதி மீது பேராசை.. அது மட்டும் இல்லேன்னா.. ராஜகோபால் லெவலே வேற!

    அனாதை இல்லங்கள்

    அனாதை இல்லங்கள்

    சரவண பவன் ஓட்டலை ஆரம்பித்த உடனேயே உணவினை சுவையாகவும் மிகத்தரமாக தர ஆரம்பித்தார். ஒரு இட்லிக்கு 4 சடனி கொடுத்தார். உயர்தரமான இவரது உணவுகள் பலருக்கும் பிடித்துப்போனாலும் ஆரம்பித்தில் மிகவும் நஷ்டத்தையே அண்ணாச்சி ராஜகோபால் சந்தித்தார். விற்காத உணவுகளை அனாதை இல்லங்களுக்கு தந்துவிடுவார். உணவு விற்காமல் போனாலும் தன்னுடைய தரத்தை குறைக்கவில்லை. ஒரே தரம் என்பதில் உறுதியாக இருந்தார்.

    நல்ல சைவ உணவு

    நல்ல சைவ உணவு

    பின்னாளில் நல்ல சைவ உணவு அண்ணாச்சி ராஜகோபால் தான் தருகிறார் என்று மெதுவாக அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. இதனால் அவரது சரவணபவன் ஓட்டலுக்கு மக்களின் வருகையும் அதிகரித்தது. அப்படியே வளர்ந்ததால் படிப்படியாக சென்னையில் சரவணபவன் கிளைகளை ஆரம்பித்தார்.

    சென்னை முழுவதும்

    சென்னை முழுவதும்

    சென்னையில் தியாகராய நகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், வடபழனி (இரு கிளைகள்), அண்ணாநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தி திரையரங்கக் கட்டிடம், பீட்டர்ஸ் சாலை, பாண்டி பஜார், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எழும்பூர், கடற்கரை தொடருந்து நிலையம், மயிலாப்பூர், அசோக் பில்லர், ஸ்பென்சர் பிளாசா, அசெண்டாஸ் தரமணி, வெங்கட நாராயணா சாலை, அண்ணா சாலை, ஆம்பிட் அம்பத்தூர் என கிளைகள் இப்போது விரிந்துள்ளது.

    டெல்லியிலும் பரவியது

    டெல்லியிலும் பரவியது

    சரவண பவன் உணவகம் காஞ்சிபுரத்தில் இரு கிளைகளுடனும், வேலூரில் ஒரு கிளையுடனும் புதுடெல்லியில் ஜன்பத் மற்றும் கன்னாட் பிளேஸ் என்ற இரு பகுதிகளில் இரு கிளைகளுடனும், திருச்செந்தூர் அருகிலுள்ள புன்னை நகரில் ஒரு கிளையுடனும் இருக்கிறது..

    36 இடங்களில் சரவணபவன்

    36 இடங்களில் சரவணபவன்

    தரமான சைவ உணவால், ஐக்கிய அரபு நாடுகளில் 9 இடங்களிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 6 இடங்களிலும், ஐரோப்பிய நாடுகளில் 4 இடங்களிலும், கனடாவில் 5 இடங்களிலும், மலேசியாவில் 4 இடங்களிலும், சிங்கப்பூரில் 4 இடங்களிலும், ஓமனில் ஒரு இடத்திலும், கதாரில் ஒரு இடத்திலும், பக்ரைனில் ஒரு இடத்திலும், பிரான்சில் ஒரு இடத்திலும் என வெளிநாடுகளில் 36 இடங்களில் சரவண பவன் கிளைகளை ஆழமராக விரிந்துள்ளது.

    புகழ் நிலைத்திருக்கும்

    புகழ் நிலைத்திருக்கும்

    தரமான உணவினை அளித்து பெயர் புகழோடு இருந்த சரவண பவன் ராஜகோபால் அண்ணாச்சி, தவறான யோசனைகளை கேட்டு ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அதற்காக கொலையும் செய்தும் கடைசியில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளியாக இப்போது மரணத்தை தழுவியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து சரவண பவன் ராஜகோபால் செய்த சாதனை என்றால், இந்தியர்களின் சைவ உணவை உலக புகழ் பெற வைத்தது தான். அதற்காகவே அவரது புகழ் நிலைத்து நிற்கும்.

    English summary
    chennai kk nagar to usa, famous vegetarian food served to world by saravana bhavan hotel rajagopal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X