சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: 14 நாட்கள் தொடர்ந்து தொற்று இல்லாததால் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் (கன்டெய்ன்மென்ட்) இருந்து இன்று மட்டும் 51 ஏரியாக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 17 ஏரியாக்கள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக நீக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களின் விவரத்தை பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12203 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5765 ஆக உள்ளது. 93 பேர் கொரோனாவால் சென்னையில் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலிஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி

கோடம்பாக்கம் மண்டலம்

கோடம்பாக்கம் மண்டலம்

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2252 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1559 பேரும் தண்டையார் பேட்டை மண்டலத்தில் 1262 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அண்ணாநகரிலும் அதிகரிப்பு

அண்ணாநகரிலும் அதிகரிப்பு

திருவிநகர் மண்டலத்தில் 1325 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1046 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மற்ற மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் தான் உள்ளது. சென்னையில் ஆலந்தூர் மற்றும் மணலி மண்டலத்தில் தான் குறைவான பாதிப்பு உள்ளது முறையே 165 மற்றும் 168 ஆக உள்ளது.

சென்னை 51 இடங்கள் நீக்கம்

சென்னை 51 இடங்கள் நீக்கம்

இந்நிலையில் சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று இல்லாத பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 51 ஏரியாக்கள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 17 ஏரியாக்களும், திருவிக நகர் மண்டலத்தில் 11 ஏரியாக்களும், இராயபுரம் மண்டலத்தில் 8 ஏரியாக்களும் நீக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ள பகுதியும் அடக்கம் ஆகும்.

மணலியில்

மணலியில்

இதுதவிர மணலி மண்டலத்தில் 5 பகுதிகளும், திருவெற்றியூர் மண்டலததில் 2 பகுதிகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 2 ஏரியாக்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஏரியாக்களும், தேனாம்பேட்டை, அண்ணா நகர், தண்டையார் பேட்டை ஆகிய பகுதிகளில் தலா ஒருஇடங்களும் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று மட்டும் 51 ஏரியாக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திருவிநகர் அதிகம்

திருவிநகர் அதிகம்

இதுவரை 846 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் மண்டலத்தில் 36 பகுதிகளும், மணலி மண்டலத்தில் 37 பகுதிகளும், மாதவரத்தில் 41 பகுதிகளும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 51 பகுதிகளும், இராயபுரம் மண்டலத்தில் 143 பகுதிகளும், திருவிநகர் மண்டலத்தில் 148 இடங்களும் அம்பத்தூர் மண்டலத்தில் 62 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதேபோல் அண்ணா நகர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், உள்பட மொத்த 15 மண்டலங்களில் எந்தெந்த பகுதிகளில் எவை எவை கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

English summary
chennai: List of Containment Zones where Cases are not reported for more than 14 days are removed from the Containment Zones -28.05.2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X