சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் ஆபத்து.. தப்பி ஓடிய அந்த 277 பேர் எங்கே.. சென்னையை காக்க.. அவர்களே முன்வந்தால் நல்லது!

தொற்று உறுதியாகி மாயமான 277 பேரும் தாங்களாக முன்வர வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: ஆஸ்பத்திரிகளில் இருந்து 277 பேர் தப்பி ஓடிவிட்டனர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர்கள் ஆஸ்பத்திரிகளில் இருந்து தப்பி ஓடிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் அதே நேரத்தில், அதில் 100 பேரின் விபரங்களை நம் போலீசார் சேகரித்துள்ளனர்... அதை வைத்து அடையாளம் காணும் பணி தீவிரமடைகிறது.

Recommended Video

    சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம்..

    தலைநகரமே தத்தளித்து கிடக்கிறது.. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது.. இதற்கு காரணம் டெஸ்ட்டுகளை சுகாதாரத்துறை அதிகப்படுத்தியதுதான்... இதனால் பாதிப்படைந்தோர் கணக்கிடப்பட்டு, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையும் தரப்பட்டு வருகிது.

    chennai lockdown: 277 corona patients disappeared in chennai

    அதனால் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில், இந்த கொரோனா டெஸ்ட் செய்யப்படுகிறது... ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் டெஸ்ட்டுக்கு வருவோர், பலர் போலி அட்ரஸ்களை தந்துவிடுகிறார்களாம்.. அதேபோல, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர்களில் சிலரும், தனிமை முகாம்களில் வைக்கப்படுவோரில் சிலரும் அடிக்கடி தப்பி ஓடிவிடுகின்றனர்.. இதனால் இவர்களுக்கு முழு சிகிச்சையும் தர முடியாமல் போகிறது.. அத்துடன் தொற்றுடனேயே இவர்கள் வெளியேறி போய்விடுவதால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

    அப்படித்தான், சென்னையில், தொற்றினால் பாதிக்கப்பட்ட, 277 பேர் மாயமாகி உள்ளனர்... அவர்கள் குறித்த பட்டியலை, மாநகராட்சி அதிகாரிகள், சென்னை மாநகர போலீசாரிடம் அளித்துள்ளனர்... அதில் 100 பேர் குறித்த விபரங்கள் மட்டும் போலீசாருக்கு தெரியவந்துள்ளன.. அதை வைத்து கொண்டு அவர்களை அடையாளம் காணும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்னொரு பிரச்சனை, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து டெஸ்ட் செய்து கொள்வதும் கிடையாதாம்.. அதனால்தான் நேற்றுகூட அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.. இந்த டெஸ்ட்கள் செய்யப்படும்போதும் உண்மையான அட்ரஸ்களை தந்தால்தான், தன் குடும்பம் உட்பட சமூகத்தையே காப்பாற்றவும் உதவும்.

    277 பேர் தப்பி உள்ளது கவலைக்குரியதாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.. இது அரசின் அலட்சியம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. முதல் அலட்சியமே அந்த 277 பேர்தான்.. நோயின் தீவிரம் இன்னமும்கூட அறியாமல் அவர்கள் தப்பி உள்ளது வியப்பாக உள்ளது.. அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? மக்களோடு மக்களாக கலந்து உள்ளனரா என்றுகூட தெரியவில்லை.

    கொரோனா.. சென்னையை சுற்றி மட்டுமல்ல... கவலை அளிக்கும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்கள்! கொரோனா.. சென்னையை சுற்றி மட்டுமல்ல... கவலை அளிக்கும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்கள்!

    அவர்களை தேடும் பணி என்பது உடனடி சாத்தியமா? இவர்களை தேடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும், இனி டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்படுவோரிடம், ஆதார் எண் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்.. அதனால் இனி யாருமே தப்ப முடியாது என்ற நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். எப்படியும், அந்த மாயமான, 277 பேரையும் விரைவில் கண்டுபிடித்து அவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவார்கள் என்று அதிகாரிகள் தரப்பிலும் நம்பிக்கை தரப்பட்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த 277 பேரும் தாங்களாகவே முன்வந்தால் புண்ணியமா போகும்!

    English summary
    chennai lockdown: 277 corona patients disappeared in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X