சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை தன்னார்வலர்

Google Oneindia Tamil News

சென்னை: கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சியாக செலுத்தப்பட்டதால் மன ரீதியிலும், நரம்பியல் ரீதியிலும் பிரச்சினைகளை சந்திப்பதால் ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அந்த தடுப்பு மருந்தின் சோதனை, உற்பத்தி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரோஜெனகாவுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளது.

இந்த மருந்திற்கு கோவிஷீல்டு என பெயரிட்டு இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமத்தை புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்!நல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்!

பரிசோதனை

பரிசோதனை

இந்த நிலையில் இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு இரு கட்டமாக செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து 3-ஆம் கட்டமாக பரிசோதனை தொடங்கப்பபட்டது. பின்னர் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக நிறுத்தப்பட்ட இந்த சோதனை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இந்த நிலையில் சென்னையில் ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி செலுதப்பட்டது. அப்போது 40 வயதான தொழில் துறை ஆலோசகர் ஒருவர் இந்த சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்டு மருந்தை செலுத்திக் கொண்டார்.

மனரீதியில்

மனரீதியில்

ஆனால் அவருக்கு அந்த மருந்தால் நரம்பியல் ரீதியிலும் மனரீதியிலும் பிரச்சினைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இவரது புகாரை அடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையமும் சீரம் நிறுவனத்தின் நெறிமுறைகள் குழு சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

அந்த தன்னர்வலருக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தியால்தான் பிரச்சினை எழுந்ததா இல்லை வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே தன்னார்வலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மத்திய மருந்து நிலைகாட்டும் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றிற்கு கடந்த 21-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

5 கோடி நஷ்ட ஈடு

5 கோடி நஷ்ட ஈடு

அதே போல் அஸ்ட்ராஜெனிக்கா நிறுவனத்தின் பேராசிரியர் ஆன்ட்ரூ போலார்டு, ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டதால் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

உற்பத்தி

உற்பத்தி

மேலும் இந்த கோவிஷீல்டு மருந்தின் சோதனை, உற்பத்தி, மருந்து விநியோகம் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறுத்திவிடுமாறும் அந்த நோட்டீஸில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

English summary
Chennai man seeks Rs 5 crore as compensation for injecting CoviShield vaccine trial. He also asked to stop testing and manufacturing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X