சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஹோட்டல்களைத் தொடர்ந்து ஆண்கள் தங்கும் விடுதிகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை என்பது மழை பெய்யும் வரை தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. ஆழ்துளை கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரும் 300 அடி, 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டன.

இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் உள்ளது.

 டிவி பெட்டி கொடுத்தீர்களே.. தண்ணீர் பிரச்சினைக்கு என்ன செய்தீர்கள்.. திமுகவுக்கு தமிழிசை சுளீர்! டிவி பெட்டி கொடுத்தீர்களே.. தண்ணீர் பிரச்சினைக்கு என்ன செய்தீர்கள்.. திமுகவுக்கு தமிழிசை சுளீர்!

சிரமம்

சிரமம்

சொட்டு நீர் வந்தாலும் அதை சிறிய பாத்திரங்களில் பிடித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தங்கும் விடுதிகள்

தங்கும் விடுதிகள்

தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதாக கூறப்படுவதை போல் ஆண்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்களும் மூடப்படுகின்றனவாம். சென்னை சேப்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளது.

அறிவிப்பு பலகை

அறிவிப்பு பலகை

சென்னைக்கு புதிதாக பிழைப்பு தேடி வரும் ஆண்களுக்கு குறைந்த வாடகை கொண்ட மேன்ஷன்கள் கை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் மேன்ஷன் 15-ஆம் தேதி முதல் மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.

ஆண்களுக்கு பேரதிர்ச்சி

ஆண்களுக்கு பேரதிர்ச்சி

இதனால் அங்கு தங்கியிருப்போரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஹோட்டல்கள் மூடிவிட்டாலும் மேன்ஷன்களில் எதையாவது சமைத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையுடன் இருந்த ஆண்களுக்கு மேன்ஷன்களும் மூடப்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Chennai Mansions are going to shut because of water problems, male workers who are staying in there affected so much.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X