சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லிக்கு போட்டியாகும் சென்னை.. சுவாசிக்க முடியாத நிலைக்கு சென்ற காற்று.. ஷாக்கிங் செய்தி!

Google Oneindia Tamil News

சென்னை: காற்று மாசுபட்டில் தற்போது டெல்லியை போலவே சென்னையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதன்படி சராசரி காற்று மாசுபாட்டில் டெல்லியை சென்னை விரைவில் மிஞ்சிவிடும் என்கிறார்கள்.

டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து டெல்லியில் உடனடியாக கட்டுமான பணிகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது.இதனால் டெல்லியில் பகல் நேரம் கூட எதுவும் தெரியவில்லை.

டெல்லி சென்னை

டெல்லி சென்னை

டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு தற்போது தென் மாநிலங்களுக்கும் பரவ தொடங்கி இருக்கிறது. டெல்லியில் இருந்து தென் மாநிலங்களை நோக்கி காற்று நகர்ந்து வருகிறது.இதனால் அங்கிருக்கும் அதிகப்படியான புகையும் தென் மாநிலங்களுக்கு வருகிறது.

என்ன எச்சரிக்கை

என்ன எச்சரிக்கை

இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் மூன்று முறை எச்சரிக்கை விடுத்து இருந்தார். டெல்லி மற்றும் வடமாநிலங்களில் இருந்து காற்று வரும். அது சென்னையில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தார். தற்போது அதேபோல் நடந்து வருகிறது.

மிக மோசம்

மிக மோசம்

அதன்படி சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருந்தது. தற்போது சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியை மிஞ்சியது

டெல்லியை மிஞ்சியது

அதன்படி சராசரி காற்று மாசுபாட்டில் டெல்லியை சென்னை மிஞ்சும் நிலை உருவாகி உள்ளது. சென்னையில் சராசரி காற்று மாசு 274 புள்ளியாக உயர்ந்துள்ளது. இதனால் இங்கு காற்று சுவாசிக்க முடியாத நிலையை எட்டி இருக்கிறது.

பெங்களூர் எப்படி

பெங்களூர் எப்படி

எப்போதும் குளு குளு என்றிருக்கும் பெங்களூரிலும் இன்று காலையில் இருந்து கடும் மாசுபாடு நிலவி வருகிறது. புகையோடு சேர்ந்து அங்கு பனியும் பெய்து வருகிறது. இதனால் மதிய நேரத்தில் கூட சூரியன் மறைக்கப்பட்டு, கருமையாக வானம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai may beat Delhi in pollution a few days: Air becomes very worst.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X