சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டு மையை காமிங்க.. சிக்கன் கிலோவுக்கு ரூ. 50 தள்ளுபடியை அள்ளிக்கிட்டு போங்க.. சென்னையில் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலில் வாக்களித்தால் சிக்கன் கிலோவுக்கு ரூ. 50 தள்ளுபடியை பெற்றுக் கொள்ளுமாறு கறிக் கடை உரிமையாளர் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அது போல் அந்தந்த மாநில அரசுகளும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வாடிக்கையாகும்.

பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை.. வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டதே! பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை.. வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டதே!

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

அரசு இயந்திரத்தை தாண்டி சமூக ஆர்வலர்களும் ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியத்தை கூறுவதுண்டு. அதுபோல் சினிமா பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளம்பரங்களில் நடிப்பதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகும்.

விளம்பரம்

விளம்பரம்

இந்த நிலையில் சென்னையில் இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் இதுபோல் வாக்களிப்பதன் அவசியத்தை மக்கள் உணர கவர்ச்சிகர விளம்பரத்தை அளித்துள்ளார்.

அயனாவரம் கடைக்காரர்

அயனாவரம் கடைக்காரர்

தேர்தலில் வாக்களித்து வந்து அந்த மையை காட்டினால் சிக்கன் கிலோவுக்கு ரூ .50 தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். இவர் அயனாவரத்தை சேர்ந்த கடைக்காரர் ஆவார்.

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இறைச்சிக் கடை உரிமையாளரின் இந்த விளம்பரம் வாக்குப் பதிவின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

English summary
Chennai meat merchant gives an advertisement saying that cast vote and get Rs 50 offer on Chicken per kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X