சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போரூர் டூ பூந்தமல்லி பைப்பாஸ்.. மெட்ரோ பாதை அமைக்க 3 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: போரூர் டூ பூந்தமல்லி பைப்பாஸ் இடையே அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் பாதை பணிகளை மேற்கொள்ள மூன்று நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன..

முன்னதாக போரூர் முதல் பூந்தமல்லி வரை 8 கிமீ தூரத்திற்கு மோனோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மெட்ரோ வழித்தடம் மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸில் தொடங்கி பூந்தமல்லி வரை 26.09 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.

இந்த வழித்தடம் தான் சென்னையில் முக்கியமான பகுதிகளான மைலாப்பூர். தியாகராய நகர், வடபழனி, வளர்ந்து வரும் ஐடி பார்க்காக வளர்ந்து வரும் போரூர் மற்றம் புறநகர் பகுதியான பூந்தமல்லி வரை இணைக்கிறது. மொத்தம் 119 கிலோமீட்டர் தூரம் மேற்கொள்ளப்பட உள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை கட்டுமான பணிகள் 2021ம் ஆண்டு முற்பாதியில் தொடங்குகிறது.

ஆடுகளை திருடி.. சினிமா தயாரித்து உல்லாச வாழ்க்கை.. சிக்கிய சென்னை பிரதர்ஸ் குறித்து பரபர தகவல்ஆடுகளை திருடி.. சினிமா தயாரித்து உல்லாச வாழ்க்கை.. சிக்கிய சென்னை பிரதர்ஸ் குறித்து பரபர தகவல்

ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன்

ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன்

சென்னை மெட்ரோ வட்டார தகவலின் படி,. மூன்று நிறுவனங்கள் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளன. ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பனி லிமிடெட், கேஇசி இன்டர்நேசனல் ஜேவி, லார்சன் அண்டு டியூப்ரோ அண்டு என்சிசி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க விரும்புவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளன.

யாருக்கு டெண்டர்

யாருக்கு டெண்டர்

செவ்வாய்கிழமை அன்று இதற்கான டெண்டர் திறக்கப்பட்டது. எந்த கம்பெனி குறைவான நிதியில் பணிகளை முடிப்பதற்கு டெண்டரில் தொகை குறிப்பிடுகிறதோ அந்த நிறுவனத்திற்கு பணிகள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். டெண்டரை பெறும் ஒப்பந்த நிறுவனம் தான் அடுத்த மூன்று ஆண்டுகளில் 9 உயர்மட்ட மெட்ரோ ரயில்களை அமைக்கும். அத்துடன் பூந்தமல்லியில் மெட்ரோ ரயில்களை பராமரிக்கும் மையத்தையும் அமைக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

லைட்ஹவுஸ் டூ பூந்தமல்லி

லைட்ஹவுஸ் டூ பூந்தமல்லி

ஃபேஸ் 1 மற்றும் ஃ பேஸ் 2 ஆகிய பகுதிகளில் இணைக்கப்படாத பகுதிகளை கேரிடர் 4 பாதை இணைக்கிறது. சென்னை லைட் ஹவுஸ் தொடங்கி போரூர் வழியாக பூந்தமல்லி வரை இணைப்பதால் இந்த பாதை சுற்றுவட்ட பாதை என்றும் அழைக்கப்படுகிறது. போரூர் மற்றும் பூந்தமல்லி இடையே ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னை பைபாஸ் சந்திப்பு, ராமச்சந்திர மருத்துவமனை, ஐயப்பந்தாங்கல் பஸ் டிப்போ, காட்டுபக்கம், குமனஞ்சாவடி, காரயான்சாவடி, முல்லை தொட்டம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

ஆசிய வங்கி அறிவிப்பு

ஆசிய வங்கி அறிவிப்பு

முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டது. இதேபோல் தற்போது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, மீனாட்சி கல்லூரியில் இருந்து பூந்தமல்லி பைப்பாஸ் வரை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

லைட்ஹவுஸ் வரை நீட்டிப்பு

லைட்ஹவுஸ் வரை நீட்டிப்பு

முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு போரூர்-பூந்தமல்லி இடையே கத்திபாராவில் இருந்து பூந்தமல்லி வரை y வடிவ பாதையில் மொனோ ரயில் அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. இந்த பாதை என்பது போரூர் முதல் வடபழனி வரையில் ஒருபகுதியாகவும், வேளச்சேரியில் இருந்து வண்டலூர் வரை ஒரு பாதையாகவும் அமைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் போரூர் முதல் பூந்தமல்லி வரை உள்ள பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்ததுடன் இங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதே சிறந்தது என்று முடிவுக்கு வந்தது அதன்பிறகு அரசு லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைப்பாஸ் வரை அந்த பாதை நீட்டித்தது.

English summary
chennai metro rail: Three companies or consortia have shown interest in constructing an elevated metrorail line between Porur junction and Poonamallee bypass. The stretch is part of 26.09km corridor-4 from Lighthouse to Poonamallee, which will link the city's core localities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X