சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடதமிழகம்: 3 நாட்களுக்கு காலை 11.30- 3.30 வரை பொதுவெளியில் வேலை செய்ய கூடாது- வெயில் வதைக்குமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு முற்பகல் 11.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை பொதுவெளியில் பொதுமக்கள் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அக்னி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல நகரங்களில் நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

Chennai Met issues heat wave warning for Northern Tamilnadu

சென்னை உட்பட வடதமிழக நகரங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் சென்னை உட்பட வட தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எச்சரித்துள்ளது வானிலை மையம்.

அத்துடன் வடதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து காணப்படும்; ஆகையால் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை பொதுமக்கள், விவசாயிகள் பொதுவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.

ஆன்லைனில் மதுபான ஆர்டரை தொடங்கியது ஸ்விக்கி.. வீட்டு வாசலிலேயே சரக்கை பெறுவது எப்படி?ஆன்லைனில் மதுபான ஆர்டரை தொடங்கியது ஸ்விக்கி.. வீட்டு வாசலிலேயே சரக்கை பெறுவது எப்படி?

மேலும் தென்கிழக்கு அரபிக் கடல், கேரளா கடற்பரப்பில் சூறாவளி காற்று வீசும்; மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 48 மணிநேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை மையம்

தமிழகத்தில் நகரங்களில் பதிவான வெப்பநிலை- (ஃபாரன்ஹீட்)

  • சென்னை 108 டிகிரி
  • திருத்தணியில் 108 டிகிரி
  • கடலூர் 107 டிகிரி
  • தருமபுரி 101 டிகிரி
  • ஈரோடு- 105 டிகிரி
  • நாகை 104 டிகிரி
  • பாளையங்கோட்டை- 100 டிகிரி
  • பரங்கிப்பேட்டை- 105 டிகிரி
  • புதுச்சேரி- 106 டிகிரி
  • சேலம் -102 டிகிரி
  • திருப்பத்தூர்- 102 டிகிரி
  • திருத்தணி- 108 டிகிரி
  • தூத்துக்குடி 100 டிகிரி
  • வேலூர்- 107 டிகிரி
English summary
Regional Meteorological Centre India, Chennai has issued a heat wave warning to the Northern TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X