சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென் மேற்கு பருவகாற்றில் மாறுபாடு - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா

தென் மேற்கு பருவகாற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக நீலகிரி,கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள

Google Oneindia Tamil News

சென்னை: தென் மேற்கு பருவகாற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் இடியோடு கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மழை குறைவான அளவே பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலும் இரவில் மழையும் பெய்கிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.

Chennai met office Weather warning on July 17th 2020

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா,பந்தலூர் தலா 9 சென்டிமீட்டர் ,கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர்அலுவலகம்,சின்னக்கல்லார்,நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி தலா 7️ சென்டிமீட்டர் மீட்டர் மழையும்,நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார்,கோவை மாவட்டம் வால்பாறை,சோலையார், தலா 5 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் மேல் பவானி, சின்கோனா தலா 4️ சென்டிமீட்டர்,நீலகிரி மாவட்டம் நடுவட்டம்,எமரால்டு,கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கள் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அடுத்த 48 மணிநேரத்திற்கு எங்கெங்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவகாற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல்,கரூர்,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி,கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பேரம்...சிக்கியது ஆடியோ...மறுக்கிறார் அமைச்சர்!!ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பேரம்...சிக்கியது ஆடியோ...மறுக்கிறார் அமைச்சர்!!

நாளை ஜூலை 18ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் .

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 18ஆம் தேதி வடக்கு அரபிக்கடல், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளிலும்,கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 18 முதல் ஜூலை 22 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
The Chennai Met Office expects moderate to heavy rain with thunderstorm in Nilgiri and Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X