சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி... நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

Google Oneindia Tamil News

Recommended Video

    நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை-வீடியோ

    சென்னை: நாளை தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகம் காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் அது தாமதமானது.

    இதையடுத்து அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தொடங்கவில்லை. இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் குளிர்ந்த காற்றும் நிலவுகிறது.

    [தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்?- உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு]

    மேலடுக்கு

    மேலடுக்கு

    இது வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டம் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

    பெய்யும்

    பெய்யும்

    இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்கள், கேரளம், தென் கர்நாடகம் ஆகிய இடங்களில் பெய்யும்.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இன்று காலை நிலவரப்படி எண்ணூர், மாமல்லபுரம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    அக்டோபர் மாதம்

    அக்டோபர் மாதம்

    இந்த ஆண்டு இயல்பை விட 12 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்ததை விட 11 சதவீதம் குறைவான மழை பெய்தது.

    English summary
    Chennai Meteorological department Director Balachandran says that North East monsoon will be started by tomorrow in TN and Pondy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X