தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெளுத்து கட்ட போகும் மழை.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகம், குமரி கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வனிதாவிடம் வறுபட்ட லட்சுமி.. டிவிட்டரே நாறி போச்சு.. யூடியூபே ஊசி போச்சு.. வாயா அது.. ஆத்தாடி!
ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.