சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வருவதாகவும், தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில்... முழு கொள்ளளவை எட்டிய 358 ஏரிகள் - வீடியோ

    வங்ககடலில் 23ம் தேதி உருவான நிவர் புயல் நேற்று (26ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது..

    இந்த புயல் திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றது. இதனால் புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. பல பகுதிகள் தண்ணீர் மூழ்கின.

    கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்

    வானிலை மையம்

    வானிலை மையம்

    நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று கூறியுள்ளது.

    வருகிறது புயல்

    வருகிறது புயல்

    நவம்பர் 29ம் தேதிக்குள் உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி வர உள்ளதாக தெரிவித்துள்ளது வானிலை மையம். பொதுவாக தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் தமிழகத்தில் தீவிர மழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது..

    எப்போது

    எப்போது

    நிவர் புயல் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தில் கரையை கடந்து சென்ற மாவட்டங்களில் இன்னமும் புயலின் தாக்கம் குறையவில்லை. வெள்ள நீர் வடியவில்லை. இந்த சூழலில் இன்னும் இரண்டு நாளில் உருவாக உள்ள புயலால் டிசம்பர் 1 முதல் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    என்ன புயல்

    என்ன புயல்

    வழக்கமாக புதிதாக உருவாகும் புயல்களுக்கு இந்தியாவை சுற்றி உள்ள 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம் அந்த வகையில் தெற்கு வங்க கடலில் உருவாகும் புதிய புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புரவி தமிழகத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்போம்

    English summary
    The Chennai Meteorological Department has forecast that a new depression will form in the south-eastern Bay of Bengal in 48 hours and that a new depression will be coming towards Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X