சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 24 மணி நேரத்தில்.. கோவை உட்பட 7 மாவட்டங்களில் கன மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கோவை, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவு இருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?

விடிய விடிய மழை

விடிய விடிய மழை

நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வேளாங்கண்ணி, நாகூர், திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

7 மாவட்டங்கள்

7 மாவட்டங்கள்

இந்த நிலையில், கோவை , நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேகமூட்டம்

சென்னையில் மேகமூட்டம்

மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தளவில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இவ்வாறு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Bakrid பண்டிகைக்கு விலங்குகளை பொது இடங்களில் பலியிட அனுமதி இல்லை | Oneindia Tamil
    குமரிக் கடல்

    குமரிக் கடல்

    கன்னியாகுமரி மாவட்டம், முட்டம், குளச்சல் முதல், கேரளா, குஜராத் வரை குமரி கடலில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி முதல் தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முட்டம் முதல் தேங்காய்பட்டணம் வரையிலான மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    English summary
    Tamilnadu weather update: The Chennai Meteorological Department has forecast heavy rains in seven districts, including Coimbatore and Krishnagiri, in the next 24 hours. It has been raining in many parts of Tamil Nadu for the last few days. It rained in some parts of Chennai this morning. A warning has been issued not to go fishing for 5 days in the Gulf of Mannar and the Andaman Sea. For Chennai, the sky will be overcast. It may rain in a few places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X