சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாகை அருகே 'கஜா'... நவம்பர் 14, 15ல் 7 மாவட்டங்களில் உஷ் உஷ் காற்று, பேய் மழை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரமடையும் கஜா புயல்-வீடியோ

    சென்னை : வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 820 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 14 இரவு முதல் நவம்பர் 15 முற்பகலில் புயல் கரையை கடக்கும் வரை 7 மாவட்டங்களில் கனமழை மற்றும் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் கஜா புயலின் தற்போதைய நிலவரம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது : கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 820 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    Chennai meteorological department issues gaja storm alert notification to 7 districts

    [வர்தா புயல் அளவுக்கு சென்னையில் பாதிப்பை ஏற்படுத்துமா கஜா? எத்தனை கி.மீ வேகத்தில் காற்று வீசும்?]

    இந்தப் புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகல் நாகப்பட்டினம், சென்னைக்கு இடையே கரையை கடக்கக் கூடும். தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் பலத்த காற்று வீசும்.

    மணிக்கு 80 முதல் 90 கி.மீட்டர் வேகத்திலும் சமயத்தில் 100 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் வரும் 15ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்.

    தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிககனமழையும் ஒரு சில இடங்களில் கனமழையை விட அதிக மழையும் பெய்யக்கூடும். நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட 1 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை உயரக்கூடும். கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    {document1}

    English summary
    Chennai meteorological department issues gaja storm alert notification to 7 districts as the cyclone is far 820 kilometers from Nagapattinam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X