சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 நாட்களில் தொடங்குகிறது பருவமழை... நல்ல சேதி சொன்ன வானிலை மையம்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் வளிமண்டலத்தில் ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

chennai meteorological department predicts NE monsoon may starts within 2 days

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவெளிவிட்டு அவ்வப்போது மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், கேளம்பாக்கம், மகாபலிபுரம், சென்னை தரமணி ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழை தற்போது தான் பெய்யத் தொடங்கியுள்ளது, படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் இதே போன்று மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
chennai meteorological department predicts NE monsoon may starts in Tamilnadu and Puducherry within 2 days as the climatic conditions were in favour of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X