சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 மாவட்ட மக்களே .. ஹேப்பி நியூஸ்.. ஜோரா மழை பெய்யப் போகுது.. என்ஜாய் செய்ய ரெடியாகுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Weather Update : தென்மேற்கு பருவக்காற்று வருகிறது..எங்கெல்லாம் பெய்யும்?

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது.

    தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று காலை வரை கனமழை பெய்யும். தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.

    திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா 352 பேர் பாதிப்பு - 8 பேர் மரணம்திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா 352 பேர் பாதிப்பு - 8 பேர் மரணம்

    பள்ளிப்பட்டு

    பள்ளிப்பட்டு

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அரக்கோணத்தில் 7 செ.மீ., திருத்தணியில் 5 செ.மீ., பள்ளிப்பட்டில் 4 செ.மீ. தேவாலாவில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    மழை

    மழை

    தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இன்று மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியிருந்தார். தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நேற்று சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    மின்தடை

    மின்தடை

    ஆரணியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் மழை பெய்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதாலும் கனமழை பெய்ததாலும் வடகிழக்கு பருவமழை போன்ற ஒரு மழையை மக்கள் உணர்ந்தனர். இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்று காலை முதல் அதிக வெப்பம் நிலவி வருகிறது.

    இரு தினங்கள்

    இரு தினங்கள்

    கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே காற்றின் மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தில் இருந்து தப்பி விட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மாலை 4 மணிக்கு மேல் ஜில்லென்று காற்று வீசி, பின்னர் சிறு தூரல்களாக பெய்கிறது. இரவு 8 மணிக்கு மேல் வெளுக்கிறது.

    English summary
    Chennai Meteorological department says that Dharmapuri, Salem, Namakkal and Perambalur districts will get heavy rainfall for today and tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X