சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் அனல் காற்று வீசும்.. வெப்பச்சலனத்தால் லேசான மழைக்கும் வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபனி புயல் ஒடிஸாவிலிருந்து மேற்கு வங்கத்துக்கு நுழைந்தது. இந்த நிலையில் ஒடிஸாவில் ஏற்படுத்திய சேதத்தை போல் அங்கும் ஏற்படுத்தியது. உண்மையில் பார்க்க போனால் இந்த புயல் தமிழகத்துக்கு வர வேண்டியது.

Chennai Meteorological department says that Tamilnadu will face heavy heat waves

ஆனால் அது சென்னையிலிருந்து விலகி ஒடிஸா பக்கம் சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் வேறு தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு.

திருச்சியில் 107 டிகிரி வெப்பம்.. முகமூடி அணிந்து எதிர்த்து.. கருப்பு கொடி காட்டி குடைபிடித்த மக்கள்திருச்சியில் 107 டிகிரி வெப்பம்.. முகமூடி அணிந்து எதிர்த்து.. கருப்பு கொடி காட்டி குடைபிடித்த மக்கள்

திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் . சென்னையில் 100 டிகிரி வரை வெப்பம் இருக்க வாய்ப்புண்டு. ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் சோளிங்கரில் 14 செ.மீ.ரும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

English summary
Chennai Meteorological Department says that because of convergence some parts of Tamilnadu gets moderate rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X