சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிதமான மழை பெய்யும், மீனவர்களுக்கு எச்சரிக்கை... வானிலை அப்டேட்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 6,7 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தென்மாவட்டங்களிலும் காவிரி டெல்டா பகுதிகளிலும் செம போடு போட்ட நிலையில் நேற்றைய தினம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துள்ளது. மிகப்பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்பதால் மக்கள் தீபாவளி ஷாப்பிங், பலகாரம் போடுவதில் பிசியானார்கள்.

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய இந்திய பெருங்கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மழை பதிவு நிலவரம்

மழை பதிவு நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் குன்னூரில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குன்னூர் பிடிஓவில் 3 செ.மீட்டரும், கோத்தகிரி, நத்தம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சேத்தியோதோப்பு, மன்னார்குடியில் 1 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நவம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 கடல் சீற்றத்துடன் காணப்படும்

கடல் சீற்றத்துடன் காணப்படும்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தமானது மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை நோக்கி நவம்பர் 6 - 8 காலகட்டத்தில் நகரக்கூடும். நவம்பர் 6 மற்றும் 7தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலிலும், நவம்பர் 7 மற்றும் 8ல் மன்னார் வளைகுடாவிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 50 கி.மீ வரையில் பலத்த காற்று வீசக் கூடும், தென்தமிழக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையில் காற்று வீசக்கூடும்

கரை திரும்ப அறிவுறுத்தல்

கரை திரும்ப அறிவுறுத்தல்

எனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நவம்பர் 6,7 தேதிகளிலும் குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு நவம்பர் 7,8 தேதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் நவம்பர் 6ம் தேதிக்கு முன்னர் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

English summary
chennai meteorological department issued warning to fishermen to avoid sailing on November 6 and 7 particularly to south west bay of bengal sea side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X