சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.. கட்டண சலுகை அறிவித்தது சென்னை மெட்ரோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து வகையான வழித்தடத்திலும் விடுமுறை நாட்களில் பயணிப்பதற்கு 50 சதவீத கட்டண சலுகை அறிவித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் இன்றுவரை வருத்ததுடன் தான் பயணிக்கிறார்கள். ஏனெனில் சென்னை போக்குவரத்து நெரிசல் என்பது மெட்ரோ ரயில் இயங்கி வரும் வழித்தடங்களில் விழி பிதுங்க வைத்துவிடும்.

Chennai Metro announces 50 per cent tariff concession on Sundays

கோயம்பேடு வடபழனி ஆலந்தூர் வழித்தடமாக இருந்தாலும் சரி, திருமங்கலம் மற்றும் சென்ட்ரல் இடையிலான வழித்தடமாக இருந்தாலும் நிச்சயம் நாம் நினைத்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு சென்றுவிட முடியாது. குறிப்பாக அண்ணா சாலை நந்தனம், சைதாப்பேட்டை வழித்தடத்திலும் போக்குவரத்து கடும் நெரிசல் தான் நிலைமை.

இந்த காரணங்களால் சென்னை மெட்ரோ ரயிலில் தான் அலுவலகம் செல்வோர், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பயணிக்க விரும்புகிறார்கள். ஆனால் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் செல்வதை விரும்புவதில்லை.

இதையடுத்து சென்னை மெட்ரோ தற்போது "அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில்மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி" அறிவித்து அசத்தி உள்ளது.

எனவே இனி விடுமுறை நாட்களில் வெளியில் செல்வதற்கு மக்கள் மெட்ரோ ரயிலை அதிகம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Chennai Metro announces 50 per cent tariff concession on sundays and government holidays
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X