சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சங்கம் வச்சவர்களை தூக்கிய சென்னை மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள் ஸ்டிரைக்.. நாளை பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

சென்னை: 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களுடன் நாளை சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

விதிகளை மீறி மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் உருவாக்கியதற்காக, 8 ஊழியர்களை பணி நீக்கம் செய்து சென்னை மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்கள் தங்களை அதிக நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

chennai metro rail staff and management and labour union talk on tomorrow

இதனிடையே திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆங்காங்கே ரயில்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை சென்னையில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக ஊழீயர்களை கொண்டு மெட்ரோ ரயில் சேவையை தங்குதடையின்றி இயக்கி வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

செவ்வாய்கிழமை காலை, தொழிலாளர் நல ஆணையம், மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை உடனே வழங்க வேண்டும்: காதர் மொகிதீன் ரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை உடனே வழங்க வேண்டும்: காதர் மொகிதீன்

இதனிடையே 8 பேர் பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் நிரந்தர ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. அடுத்த அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
8 metro staffs dismissed issue: chennai metro rail staff and management and labour union will talk on tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X