சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழியர்களின் போராட்டத்தால் மெட்ரோ ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை: மெட்ரோ ரயில் நிர்வாகம்

Google Oneindia Tamil News

சென்னை: 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆங்காங்கே ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளதால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக ரயில் சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சட்ட விதிகளுக்கு எதிராக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் உருவாக்கியதற்காக, 8 ஊழியர்களை பணி நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது. பணியாளர் சங்கம் உருவாக்கிய ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதால் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Chennai Metro Rail staff Demonstrate requests and do protest in office

இதனை அடுத்து 8 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தெரிய வந்த தகவல்கள் பின்வருமறு:

ஊதிய உயர்வு வேண்டும் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகவே சென்னை மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தது ஆனால் ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மெட்ரோ நிர்வாகம் கோரிக்கைகளை வலியுறுத்திய பணியாளர் சங்க நிர்வாகிகள் 8 பேரை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்தது

நாளை கடல் கொந்தளிக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!நாளை கடல் கொந்தளிக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களை அதிக நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ நிர்வாகம் தங்களை அடிமை போல நடத்துவதாகவும், நியாயத்திற்காக குரல் எழுப்பியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் சேர்த்து கொள்ள வேண்டும். ஊழியர்களிடம் பாரபட்சம் காட்ட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆங்காங்கே ரயில்களை நிறுததி போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே மெட்ரோ ரயில் சேவை தற்போது சீராகிவிட்டதாகவும் ஊழியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

English summary
Chennai Metro Rail staffs doing protest in koyambedu metro train workshop and demanding to fulfill their requests
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X