சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலையப் பொறுப்பாளர்கள், ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

சென்னையில் தற்போது முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை 45 கிலோமீட்டர் துரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் காலை, மாலை, இரவு என மூன்று ஷிப்ட்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

chennai metro railway station privatisation from today

இந்நிலையில் இன்று முதல் சென்னை அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பா, கீழ்பாக்கம், நேரு பார்க், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் நந்தனம் ஆகிய 9 மெட்ரோ ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலையப்பொறுப்பாளர்களாக ஒப்பந்த ஊழியர்களே இந்த 9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நியமிக்கப்பட உள்ளார்கள். இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதுஇனி செயல்படுவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஹா.. இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகனச்சட்டம்.. தண்டனை, அபராதம் பல மடங்கு ஜாஸ்திஆஹா.. இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகனச்சட்டம்.. தண்டனை, அபராதம் பல மடங்கு ஜாஸ்தி

ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிலையத்தில் நிலைய கட்டுப்பாட்டாளராக உள்ள நிரந்தர பணியாளர்கள் அனைவரும், வரவு செலவு கணக்குகள், முக்கியமான அறைகளுக்கான சாவிகள், கணினிகள் மற்றும் தங்கள் வசம் உள்ள பொறுப்புகளை புதிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளது.

மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்பு பணிகளில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் முக்கிய பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அரசு ஊழியர் அந்தஸ்தில் உள்ள நிரந்தர பணியாளர்கள் இனி தங்கள் நிலை என்னவாகும் என அச்சத்தில் உள்ளார்கள்.

இதனிடையே சென்னை மெட்ரோ அதிகாரிகள் வெளியிட்ட விளக்கத்தில், குறிப்பிட்ட பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் ஒப்பந்தஊரியர்களை நியமிக்க உள்ளோம். அரசு ஊழியர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அவர்கள் எந்த ரயில் நிலையத்தில் எந்த பணியை செய்தார்களோ, அந்த பணியை செய்வார்கள். எனவே அரசு ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.

English summary
9 chennai metro railway stations included Anna Nagar Tower, Anna Nagar East, Senai Nagar privatisation from today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X