சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ண்ணா.. நிலாவுல தண்ணி கிடைச்சா.. முதல்ல எங்களுக்கு சொல்ணா.. இஸ்ரோவை விஷ் பண்ணிய மெட்ரோ வாட்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் செலுத்திய இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம், நிலவில் தண்ணீரிருந்தால் தங்களுக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த கோடைகாலத்தில் தண்ணீர் நிலைகள் வறண்டு, மக்கள் தண்ணீருக்காக அல்லோகலப்பட்டனர்.

தண்ணீர் இல்லாத பகுதிகளில் சென்னை மெட்ரோ வாரியம் லாரிகள் மூலம் குடிநீரை விநியோகம் செய்தது. எனினும் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை. ஒரு நாளைக்கு 10 முதல் 15 நடை வரை மெட்ரோ வாரியம் தண்ணீர் விநியோகம் செய்தது.

காத்திருந்து

காத்திருந்து

கண்வாய், கல்குவாரிகளில் உள்ள தண்ணீரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனினும் போதாத காரணத்தால் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னை மக்களும் தண்ணீர் எங்கதான் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இந்த நிலையில் நிலவின் தென் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் முதல் தடவை தொழில்நுட்பக் கோளாறுக்கு பிறகு, நேற்றைய தினம் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நாடே கொண்டாடி வருகிறது.

வாழ்த்து

வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு தரப்பினரும் இஸ்ரோவுக்கு வாழ்த்தை தெரிவித்தன. ஆனால் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்த வாழ்த்தை இஸ்ரோவால் மறக்கவே முடியாது.

நகைச்சுவை

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சந்திரயான் 2வை நிலவில் செலுத்தியமைக்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நகரில் புதிய நீர் நிலைகளை அதிகரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஒரு வேளை நிலவில் தண்ணீரை கண்டறிந்தால், முதலில் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? என நகைச்சுவையாக கேட்டுள்ளது.

English summary
Chennai Metro Water asks ISRO We are in the process of augmenting new water resources for our city. If you find any water on the Moon, you know whom to call first.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X