சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குளோரியாவுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் இப்படி ஏமாந்திருக்க மாட்டார்

மூதாட்டியை ஏமாற்றி பணத்தை ஏமாற்றி உள்ளார் ஒரு இளம்பெண்.

Google Oneindia Tamil News

சென்னை: குளோரியா-க்கு மட்டும் எழுத, படிக்க தெரிந்திருந்தால் இன்னைக்கு இப்படி ஏமாந்திருக்க மாட்டார்.

சென்னை கண்ணகிநகரில் வசிப்பவர் தான் குளோரியா. 60 வயதாகிறது. கணவரை இறந்து பல வருஷமாச்சு. அதனால் தன் வயிற்று பிழைப்புக்காக காரப்பாக்கத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.

தனக்கு வரும் சம்பாத்தியத்தில் சாப்பாட்டுக்கு போக மீதி பணத்தை ஒருவரிடம் சீட்டு கட்டியிருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்த சீட்டுப்பணத்தை குளோரியா கஷ்டப்பட்டு சேர்த்து வந்தார். கடைசியில் ரூ.57 ஆயிரம் சீட்டுப்பணம் வந்திருந்தது. அதனை குளோரியா வங்கிக்கணக்கிலேயே சீட்டு பிடித்தவர் செலுத்தி விட்டார்.

எழுத படிக்க தெரியாது

எழுத படிக்க தெரியாது

இந்நிலையில் குளோரியாவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதனால் கடந்த 26-ம் தேதி ஏடிஎம் கார்டு எடுத்து கொண்டு, பிடிசி குடியிருப்பு அருகில் இருக்கும் தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க போனார். எழுத படிக்க தெரியாத குளோரியா, எப்பவுமே ஏடிஎம் வந்தால், அங்கிருக்கும் செக்யூரிட்களிடம் தன் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் சொல்லி பணம் எடுத்து தர சொல்வார்.

இளம்பெண்

இளம்பெண்

ஆனால் அன்றைக்கென்று பார்த்து, ஏடிஎம் வாசலில் கியூ நின்று கொண்டிருந்தது. செக்யூரிட்டியோ பிசியாக இருந்தார். அதனால் குளோரியா, தனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணிடம், ஏடிஎம் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் சொல்லி பணத்தை எடுத்து தர சொன்னார்.

ஷாக் ஆன குளோரியா

ஷாக் ஆன குளோரியா

ஆனால் அந்த பெண்ணோ, குளோரியாவின் கார்டையும், பின் நம்பரையும் வாங்கி மறைத்து கொண்டு, வேறு ஒரு ஏடிஎம் கார்டை மெஷினில் சொருகினார். பிறகு குளோரியாவிடம், நம்பர் தப்பா இருக்கே, சரியா சொல்லுங்க என்றார். இதை கேட்டு ஷாக் ஆன குளோரியா, "எப்பவுமே இந்த நம்பரைதான் சொல்லுவேன்ம்மா.. செக்யூரிட்டி எனக்கு எடுத்து தருவார்" என்றார்.

பணம் அபேஸ்

பணம் அபேஸ்

உடனே அந்த பெண்ணும், "இங்க நீங்களே பாருங்க, உங்க எதிரேதான் கார்டு போடறேன், நீங்க சொன்ன நம்பரைதான் போடறேன், பணம் வரலையே, போய் பேங்கில் என்ன விவரம்-னு கேளுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய அந்த பெண் வேறு ஏடிஎம்முக்கு சென்று குளோரியாவின் கார்டு, பின் நம்பரை வைத்து சீட்டு பணத்தை அப்படியே அபேஸ் பண்ணி கொண்டு ஓடிவிட்டார்.

உங்க கார்டு இல்லை

உங்க கார்டு இல்லை

விவரம் தெரியாமல் கண் கலங்கிய குளோரியா, பேங்குக்கு சென்று விவரத்தை சொல்லி அழுதார். வங்கியில் கார்டை வாங்கி பார்த்தவர்கள், "இது உங்கள் ஏடிஎம் கார்டே இல்லையே? 57 ஆயிரம் ரூபாய் யாரோ எடுத்திருக்காங்களே" என்று சொன்னார்கள்.

இளம்பெண்ணுக்கு வலை

இளம்பெண்ணுக்கு வலை

பணம் எல்லாமே போச்சே என்று அழுத குளோரியா, இதுதொடர்பாக கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்படி போலீசாரும் விசாரணை நடத்தி, ஏடிஎம் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பார்த்தபோதுதான், இளம்பெண் பணத்தை ஆட்டைய போட்டு சென்றது தெரியவந்தது. திருவள்ளூரை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் இப்போது தேடி வருகிறார்கள்.

English summary
Money Robbery in ATM near Chennai. The police are searching for the woman who snatched money from the old lady.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X