சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சென்னை புதுமண தம்பதி!

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக சென்னை புதுமண தம்பதி உயிர் தப்பினர்.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய அங்கு கூடினர். அது போல் ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

இந்த நிலையில் 3 தேவாலயங்களிலும் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 290 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சொந்த தம்பியையே நடு ராத்தியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி! சொந்த தம்பியையே நடு ராத்தியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி!

விசாரணை

விசாரணை

இந்த துயர சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இலங்கை அரசும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.

திருமணம்

திருமணம்

இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பிலிருந்து சென்னை புதுமண தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர்கள் இனியன், கீதாஞ்சலி. இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணமானது.

ஹோட்டல்

ஹோட்டல்

இவர்கள் இருவரும் தேனிலவுக்காக இலங்கைக்கு கடந்த 19-ஆம் தேதி கொழும்பு சென்றனர். இருவரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஹோட்டல்களில் ஒன்றான கிங்ஸ்பரி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு

மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை தொடங்க சென்ற தம்பதிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இந்த குண்டுவெடிப்பு அமைந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தாலும் பல உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து வெளி வர இவர்களுக்கு பல நாட்கள் ஆகும்.

English summary
Chennai newly married couple escapes from Srilanka bomb blast fortunately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X