• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்

|
  குடிநீருக்காக காத்திருக்கும் சென்னை மக்கள்

  சென்னை: நீங்கள் சென்னைவாசியாக இருந்ததால் நிச்சயம் தண்ணீரின் அருமையை உணர்ந்து இருப்பீர்கள். பணக்காரன், ஏழை என எந்த பாகுபாட்டையும் இயற்கை காட்டவில்லை. குறிப்பாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் என்பது சுத்தமாக இல்லை. இதனால் அங்கு குடியிருப்புகளை மக்கள் காலிசெய்து வேறு இடங்களை நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள். இந்தியாவின் 6வது பெரிய நகரமான சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுததமாக தண்ணீர் இல்லை என்பதை உலகமே இப்போது சொல்ல தொடங்கி உள்ளது.

  சென்னை: பருவமழை என்பது தமிழகத்தில் பொய்த்துவிட்டது. சென்னையின் பல இடங்களில் சுத்தமாக தண்ணீர் இல்லை. இதுவரை தினமும் மெட்ரோ வாட்டர் கிடைத்து வந்த மைலாபூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தைவெளி உள்பட தென்சென்னை பகுதியே தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. இதேபோல் எப்போதுமே காசு கொடுத்து தண்ணீர்வாங்கி வந்த ஓஎம்ஆர் பகுதி மக்கள் இப்போது தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

  மழைநீர் சேகரிப்பை உணராமல் அதிக ஆழத்துக்கு போர் போட்டு, அதில் ஊறிஞ்ச்சி, உறிஞ்சி வாழ்ந்த மக்கள் இப்போது அதிலும் தண்ணீர் இல்லாததால் என்ன செய்வதுஎன்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

  புகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ!

  வறண்ட ஏரிகள்

  வறண்ட ஏரிகள்

  அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்ணீர் பிரச்னை இல்லை என்று சொன்னாலும், எதார்த்தம் என்பதே வேறு. கடந்த 10 ஆண்டுகளில் சென்னை இதுபோல் மோசமான தண்ணீர் பிரச்னையை சந்தித்தது இல்லை என சொல்லலாம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விளையாட்டு மைதானங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் வீதிகள் தோறும் தண்ணீருக்காக மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காலிக்குடங்களுடன் காட்சி அளிக்கிறார்கள்.

  கல்குவாரி நீர்

  கல்குவாரி நீர்

  கடல்நீரை குடிநீராக்குதல், கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் சென்னையின் குடிநீர் தேவையை குறைந்த பட்சம் பூர்த்தி செய்யும் அளவுக்கு கூட இல்லை என்பதே எதார்த்தம்.

  9 ஆயிரம் லாரி தண்ணீர்

  9 ஆயிரம் லாரி தண்ணீர்

  மிகப்பெரிய அளவில் வணிகமயான நகரமாகவிட்ட சென்னையில், பல ஆயிரம் மக்கள் தினமும் வந்து செல்லும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பல ஆயிரம் மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், நிறைந்து காணப்படுகிறது. இதேபோல் பல்லாயிரம் பேர் வேலை செய்யும் ஐடி நிறுவன கட்டிடங்கள், அலுவலங்கள் என லட்சக்கணக்கான நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. இவற்றுக்கு ஒரு நாள் வெளியேறும் 9 ஆயிரம் லாரிகள் தண்ணீர் எந்த மூலைக்கு காணும்.

  ஒன்றறை கோடி மக்கள்

  ஒன்றறை கோடி மக்கள்

  ஆம் ஒரு நாளைக்கு 9 ஆயிரம் நடை தான் தண்ணீர் லாரிகள் செல்கின்றன. இது நேற்று முன்தினம் அமைச்சர் வேலுமணி அளித்த பதில் இதுதான். இவை சென்னையில் குடியிருப்பில் வசிக்கும் ஒன்றறை கோடி மக்களுக்கு போதாது என்ற நிலையில் வணிக கட்டிடங்களின் நிலையை யோசித்து பாருங்கள். இதுதான் மிக அபாயகரமான எதார்த்தம். கடல்நீரை குடிநீராக்குதல், கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்தல் போன்றவற்றின் மூலம் தண்ணீர் பெறலாம் என்றாலும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய போதாது என்பதே உண்மை.

   மேன்சன் காலியாகிறது

  மேன்சன் காலியாகிறது

  தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள குடியிருப்புகளை மக்கள் காலிசெய்து வேறு இடங்களை நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள். இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மேன்சகளில் குடியிருந்த பலர் தண்ணீர் இல்லாததால் மேன்சன்களை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கே சென்றுவிட்டார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  India's 6th largest city just ran out of water, chennai omr residency and lodges closed over water crises
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more