சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பரங்கிமலை துணை கமிஷனர்

Google Oneindia Tamil News

சென்னை: பல்லாவரத்தில் முழு ஊரடங்கின் போது உணவில்லாமல் தவித்தவர்களுக்கு உதவியுள்ளார் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர்.

சென்னை உட்பட தமிழகம் முழுக்க ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது. 6வது ஊரடங்கு காலகட்டத்தில் நாடு முழுக்கவே ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படித்தான் தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

Chennai Parangi Malai Deputy Commissioner Prabhakar helps poor people

எனவே இதை மீறி செயல்படும் நிறுவனங்களையும், நபர்களையும் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.

சென்னை பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் நேற்று இப்படித்தான், பல்லாவரம் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த யாசகர்கள் சிலரை, கண்டு காரை விட்டு இறங்கி சென்று அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

Chennai Parangi Malai Deputy Commissioner Prabhakar helps poor people

அவர்கள் உணவு கிடைக்காமல் இருந்ததை அறிந்து கொண்டு அவர்களுக்கு முழு ஊரடங்கினால் கடைகள் இல்லாத நிலையிலும் மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்.

Chennai Parangi Malai Deputy Commissioner Prabhakar helps poor people

முழு ஊரடங்கில் உணவில்லாமல் தவித்த சாலையோர மக்களின் பசியை போக்கிய பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகருக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

 எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நாளை முதல் விநியோகம் - மாஸ்க் அவசியம் மாணவர்களே எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நாளை முதல் விநியோகம் - மாஸ்க் அவசியம் மாணவர்களே

Recommended Video

    Heavy rains continued in Chennai

    English summary
    Parangi Malai Deputy Commissioner Prabhakar has assisted those who were affected during the entire curfew.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X